Dhanush
Dhanushஎக்ஸ் தளம்

தனுஷின் ’D54’ - VJ Siddhuவின் `டயங்கரம்'.. ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்ஸ் | Ishari K Ganesh

நான் இப்போது 10 படங்கள் தயாரித்து வருகிறேன். அதில் அதிகம் கேட்கப்படும் படமாக வி.ஜே.சிந்துவின் படம்தான் இருக்கிறது.
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். பல படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனத்தில் பல முன்னணி இயக்குநர்கள் இயக்கும் படத்தை தயாரிக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர். அந்தப் படங்களில் சிலவற்றின் அப்டேட்டை லண்டனில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஐசரி கணேஷ் கொடுத்திருக்கிறார்.

அதில், வி.ஜே.சித்து இயக்கும் `டயங்கரம்' படம் குறித்து பேசிய அவர், "வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. படத்தின் அறிவிப்பு வீடியோவே பெரிய அளவில் வைரலானது. நான் இப்போது 10 படங்கள் தயாரித்து வருகிறேன். அதில் அதிகம் கேட்கப்படும் படமாக வி.ஜே.சிந்துவின் படம்தான் இருக்கிறது. துபாயில் ஒரு கடையில் இருந்தபோது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி  `டயங்கரம்' எப்போது ரிலீஸ் எனக் கேட்டார். அந்த அளவுக்கு ரீச். இதை எல்லாம் நான் சித்துவிடம் கூறினேன். அவர் ’சார் நீங்க சொல்லச் சொல்ல பயமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு கதையை இன்னும் செதுக்குகிறேன்’ எனக் கூறினார்” என்றார். மேலும் தனுஷின் அடுத்த படமான ’D 54’ பற்றி " `போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா, `தனுஷ் 54' படத்தை துவங்கினார், இப்போது படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டது. படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்" எனக் கூறினார்.

Dhanush
நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் ஐசரி கணேஷ்

தொடர்ந்து பிரேம்குமார் இயக்கவுள்ள படம் பற்றி, "பிரேம்குமார் அருமையான இயக்குநர். அவரது ’96’ மற்றும் ’மெய்யழகன்’ இரண்டு படங்களும் எனக்குப் பிடிக்கும். அடுத்து அவர் இயக்கும் படத்தை நான் தயாரிக்கிறேன். ஃபகத் பாசில் நடிப்பில் பிரேம்குமார் இயக்கும் அந்தப் படம் இன்னொரு `ஆவேஷம்' ஆக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து அடுத்ததாக துவங்கவுள்ள ’மியூசிக் லேபிள்’ பற்றி, "இப்போது எங்கள் தயாரிப்பில் 6 படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. 6 படங்கள் ப்ரீ புரொடக்ஷனில் உள்ளது. தயாரிப்பாளராக நிறைய படங்கள் செய்துவிட்டேன், ஃபிலிம் சிட்டி, தீம் பார்க், ட்ரேட் எனப் பலவற்றைச் செய்துவிட்டேன். ஒன்றே ஒன்றுதான் பாக்கி.அது வேல்ஸ் மியூசிக். அதை என்னுடைய பிறந்தநாள் அன்று துவங்க உள்ளேன். பல இசையமைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்" என்றார் ஐசரி கணேஷ்.

Dhanush
”யார் வெற்றி பெற்றாலும் நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்” - ஐசரி கணேஷ்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com