”சரியா ஒத்துழைக்கலைனா இந்த 5 நடிகர்களுடன் இனி வேலைசெய்ய மாட்டோம்” - தயாரிப்பாளர்கள் முன்வைத்த புகார்

5 நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு நடிகர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்து பேசி தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு
தயாரிப்பாளர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்புTwitter

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதில், 5 நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிகழ்வில் சில நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு, படப்பிடிப்புக்கு தேதி கொடுக்காமல் தாமதம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு
”இனி இந்திப் படங்களுக்கு அனுமதியில்லை”.. ஆதிபுருஷ் பட சர்ச்சையை அடுத்து நேபாளம் அதிரடி முடிவு

இதையடுத்து, “தேதி கொடுக்காமல் குளறுபடி செய்யும் நடிகர்களுக்கு இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 5 நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு நடிகர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்து பேசி தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் பழைய நிலையை தொடர்ந்தால், அந்த நடிகர்களுடன் படம் எடுப்பதை தவிர்த்து அவர்களுக்கு ரெட் கார்டு, அதாவது ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அது எந்தெந்த நடிகர்கள் என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, நடிகர் சங்கத்திடம் பேசியப் பிறகே இதுகுறித்து முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ் சினிமா நடிகர்கள்
தமிழ் சினிமா நடிகர்கள்

அப்போது, 3 நாட்களுக்கு பிறகு திரை விமர்சனங்கள் வெளியிட வேண்டும், சிறிய படங்களுக்கு உரிய திரையரங்குகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.

நடிகர்கள் ஒத்துழைப்பு குறித்து பேசுகையில், ”சிறிய திரைப்படங்களுக்கு மானியம் கொடுக்கணும்னு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். இந்த கோரிக்கையை ஆலோசனை செய்து தமிழக அரசு கமிட்டி ஒன்றினை உருவாக்கியுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி. நிறைய நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

அதற்காக, எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நடிகர்களுடன் வேலை செய்ய மாட்டோம் என்று எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றாக முடிவு செய்துள்ளோம். நிறைய தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்து நடிகர்களிடம் இருந்து தேதி சரியாக வராமல் இருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறோம். இந்தப் பிரச்னையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

அந்த நடிகர்கள் யார் என சொல்ல முடியுமா என செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்க, அதற்கு பதிலளிக்கையில், “அதனை தற்போது சொல்ல முடியாது. நடிகர் சங்கத்துடன் சுமூகமாக பேசி முடிவு செய்த பின்னரே அதனை அறிவிப்போம். பயம் என்று இல்லை. இது முதல்கட்ட நடவடிக்கைதான். தொடர்ந்து அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை நிச்சயம் அவர்களுடன் வேலை செய்யமாட்டோம். இது எச்சரிக்கை அல்ல. எங்களுக்கு ஒத்துழைப்பு இல்லாதவர்களுடன் எங்களுக்கு வேலை இல்லை, அவ்வளவுதான்” என்று அழுத்தமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com