Is Suriya 47 a Tamil film of Malayalam? director Jithu open up
Suriya, Jithu MadhavanSuriya 47

`சூர்யா 47' தமிழ்ப் படமா.. மலையாளப் படமா? - ஜித்து மாதவன் சொன்ன பதில் | Suriya 47

இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படம் மூலம் பெரிய இடைவெளிக்குப் பின் சூர்யா மீண்டும் போலீஸ் பாத்திரத்தில் நடிக்கிறார்.
Published on

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கிவரும் படம் `சூர்யா 47'. இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படம் மூலம் பெரிய இடைவெளிக்குப் பின் சூர்யா மீண்டும் போலீஸ் பாத்திரத்தில் நடிக்கிறார். ஜித்து மாதவன் இதற்கு முன்பு `ரோமாஞ்சம்', `ஆவேஷம்' என மலையாளத்தில் இரு ஹிட் படங்களை கொடுத்தார். எனவே `சூர்யா 47' மலையாள படமா, தமிழ்ப் படமான என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இதனையடுத்து சமீபத்தில் கொச்சி ஏர்போர்ட்டில் ஜித்து மாதவனிடம், `ஆவேஷம் 2' பற்றி கேட்கப்பட, "இப்போதைக்கு அதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளது" எனத் தெரிவித்தார். சமீபத்தில் பகத் பாசில் கலந்துகொண்ட நிகழ்வில் `ஆவேஷம் 2' பற்றி கேட்கப்பட, " ‘ஆவேஷம் 2’ எப்போது என எங்கு போனாலும் கேட்கிறார்கள், கண்டிப்பாக அந்தப் படம் உண்டு. 2027 அல்லது 2028இல் துவங்கிவிடுவோம்" என்றார். இதன்மூலம் ஆவேசம் 2 உருவாவது உறுதி.

மேலும் அவரிடம், `சூர்யா 47' பற்றி கேட்கப்பட, "`சூர்யா 47' படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார். மேலும், இது ஒரு தமிழ்ப் படம் என்பதையும் உறுதிபடுத்தி இருக்கிறார். சூர்யா நடிப்பில் `கருப்பு' படம் தேர்தலுக்குப் பிறகு வெளியாக உள்ளது. அதன் பிறகு ஜீத்து மாதவன் படம், வெங்கி அட்லூரி படம் என வரிசையாக சூர்யா படங்கள் வர இருக்கின்றன.

Is Suriya 47 a Tamil film of Malayalam? director Jithu open up
சூர்யா நடித்துள்ள `கருப்பு', விஜய்க்கு சொன்ன கதையா? - ஆர்.ஜே பாலாஜி பதில் | Vijay | Suriya | Karuppu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com