\
Is RKFI indicates Ashwath Marimuthu directing Thalaivar 173?
Ashwath MarimuthuX

தலைவர் 173 இயக்குநர் யார்... மறைமுகமாக சொன்னதா ராஜ்கமல்? | Thalaivar 173 | Rajinikanth | RKFI

இப்போது `ஜெயிலர் 2' படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Published on

`ஜெயிலர் 2' படத்தை முடித்தபின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் `தலைவர் 173' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதில்லை, `ஓ மை கடவுளே', `டிராகன்' படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது.

இப்போது `ஜெயிலர் 2' படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இன்று இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். `தலைவர் 173' படத்தை தயாரிக்கவுள்ள ராஜ்கமல் நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

இதன் மூலம் `தலைவர் 173' படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் என்பதை மறைமுகமாக சொல்கிறது ராஜ்கமல் நிறுவனம் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. முதலில் இப்படத்தை இயக்க சுந்தர் சி ஒப்பந்தமாகி, ஒருவாரத்துக்குள்ளாகவே தான் படத்திலிருந்து வெளியாவதாக அறிவித்தார். பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இப்போது சிபி இல்லை, அஷ்வத் தான் இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Is RKFI indicates Ashwath Marimuthu directing Thalaivar 173?
`மஞ்சணத்தி' படம் `வாழை 2'வா? - மாரி செல்வராஜ் சொன்ன பதில் | Mari Selvaraj | Manjanathi
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com