முதலில் ஹீரோ, அடுத்து தான் `கைதி 2'... லோகேஷின் திட்டம்? | Lokesh Kanagaraj | Kaithi 2 | LCU
லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமாக `கைதி 2' இயக்கவுள்ளார். இதற்கு முன் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரஜினி - கமல் படத்தை அவர் இயக்கவில்லை என்பதால், `கைதி 2' தான் அடுத்ததாக உறுதியாக உள்ளது. மேலும், கமலின் `விக்ரம் 2', சூர்யாவின் `ரோலக்ஸ்' போன்ற படங்களும் அவரது திட்டங்களில் உள்ளன.
தமிழ் சினிமாவில் மிகச் சில படங்களிலேயே முன்னணி இயக்குநராக வளர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய `கூலி' வசூல் ரீதியாக ஹிட் என்றாலும், விமர்சன ரீதியாக பின்னடைவையே சந்தித்தது. மேலும் அடுத்ததாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்திற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை என சொல்லப்படுகிறது. இன்னொரு தரப்பு அப்படத்தை நெல்சன் இயக்குவார் என சொல்கிறார்கள்.
அப்போது லோகேஷின் அடுத்த படம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. லோகேஷ் சில பேட்டிகளில் உறுதி செய்தது போல, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் லோகேஷ். இதன் படப்பிடிப்பு பூஜை நேற்று துவங்கியுள்ளதாம். ஹீரோவாக வேலையை முடித்த கையோடு, `கைதி 2' பட வேலைகளில் இறங்க உள்ளார். `கைதி' படத்தை முடித்த உடனே `கைதி 2' படத்தை லோகேஷ் இயக்க வேண்டியது. ஆனால் அதன் பிறகு விஜயின் `மாஸ்டர்', `லியோ', கமலின் `விக்ரம்', ரஜினியின் `கூலி' என்று அடுத்தடுத்த படங்களினால் பிஸியானார். எனவே `கைதி 2' படம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
ரஜினி - கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்பது உறுதி என்ற பட்சத்தில், `கைதி 2' தான் லோகேஷ் இயக்கும் அடுத்த படம் என உறுதியாக சொல்லப்படுகிறது. இது இல்லாமல் கமலின் `விக்ரம் 2', சூர்யாவுடன் `ரோலக்ஸ்', ஆமீர்கானுடன் ஒரு படம் போன்றவையும் லோகேஷ் இயக்கும் பட பட்டியலில் உள்ளன. இவற்றில் எதெல்லாம் படமாக உருவாகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

