விவசாயிகளுடன் கமல்ஹாசன் - எச் வினோத் ஆலோசனை.. கூட்டணி உறுதியா? - வைரலாகும் புகைப்படம்!

விரைவில் ‘இந்தியன் 2’ படம் வெளிவரவுள்ளதாக அண்மையில் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.
கமல்ஹாசன்-எச் வினோத்
கமல்ஹாசன்-எச் வினோத்Twitter

‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் இந்தப் படம் வெளிவரவுள்ளதாக அண்மையில் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.

‘இந்தியன் 2’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Traditional Rice conservation center-ன் உறுப்பினர்களை நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச் வினோத் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால், கமல்ஹாசனின் 233-வது படத்தை எச் வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வருகிற 17 மற்றும் 18-ம் தேதி, மறைந்த நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நடத்தும் தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அதன் உறுப்பினர்களை கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் சந்தித்துள்ளனர். மேலும், ஜூன் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறும் 'தேசிய நெல் திருவிழா - 2023' இல் தமிழகத்தின் வளர்ச்சியில் அன்பும் அக்கறையும் கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. எச் வினோத் கடைசியாக அஜித்தின் ‘துணிவு’ படத்தை இயக்கியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com