‘விடாமுயற்சி’ படத்தில் இவர்தான் வில்லனா? - அதிரடிக்கு தயாராகும் படக்குழு!

அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்
அஜித்Twitter

‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனியுடன் முதன்முறையாக கரம்கோர்த்துள்ளார் அஜித்குமார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது லண்டனில் உள்ள அஜித்குமாரும், மகிழ்திருமேனியும் அடுத்த வாரம், புனே நகரில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பை தொடங்குகின்றனர். இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

அர்ஜூன்தாஸ்
அர்ஜூன்தாஸ்Twitter

இந்நிலையில், இந்தப் படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் அர்ஜூன் தாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. த்ரில்லர், ஆக்ஷன் படமாக இருந்தாலும், கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆகவும், அழகான காதல் காட்சிகளை வைப்பதிலும் கைதேர்ந்தவரான மகிழ் திருமேனி, அஜித்தின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காமல், காதல் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகளை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில், அஜித்தின் அஜித்தின் முந்தையப் சில படங்களில், ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை அடுத்த கோடை விடுமுறைக்கு வெளியிடும் வகையில் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com