Top 10 Cinema News
Top 10 Cinema NewsJailer 2, Irumbukai Maayavi

`இரும்புக்கை மாயாவி'யில் இவரா? to தெலுங்கில் குல்ஷன் தேவய்யா | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகளில் `இரும்புக்கை மாயாவி', `ஜெயிலர் 2', `Ready or Not 2' என பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.

1. `ஜெயிலர் 2'வில் விநாயகன்?

Jailer 2
Jailer 2

2. 33 Years of Vijay

33 Years of Vijay
33 Years of Vijay

விஜய் திரைத்துறைக்கு வந்து இன்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் திரைத்துறையில் இதுதான் விஜய்க்கு கடைசி வருடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. `இரும்புக்கை மாயாவி'யில் அல்லு அர்ஜூன்

Allu Arjun
Allu Arjun

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார் என சில தினங்களாக செய்திகள் உலா வருகிறது. இப்போது லோகேஷ் `இரும்புக்கை மாயாவி' படத்தின் கதையை அல்லு அர்ஜுனுக்கு சொன்னதாகவும், அதற்கு அவரின் பதில் இன்னும் கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

4. சிவாவின் அடுத்த இரண்டு படம்

SK
SK

சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் மாநாடு போல ஒரு Time based Fantasy படமாக இருக்கும் எனவும், இதற்கான லுக் டெஸ்டை சிவா மற்றும் வெங்கட்பிரபு செய்து வருகின்றனர் எனவும் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு சிபிச் சக்கரவர்த்தி படத்தில் நடிக்கிறார் சிவா. அதன் படப்பிடிப்பு 2026ன் பிற்பகுதியில் துவங்க உள்ளதாம்.

5. முடிந்தது ட்யூட் பிரச்னை!

Dude
Dude

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வந்த `ட்யூட்' படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது ஒரு சிக்கலாக மாறியது. இப்போது அப்பாடல் பயன்படுத்தியதற்காக இளையராஜாவுக்கு 50 லட்சம் கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். எனவே இப்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

6. தள்ளிப்போன `Lockdown'

ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் `Lockdown'. இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், மழையின் தீவிர தன்மை காரணமாக படத்தை தள்ளி வைத்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க உள்ளது படக்குழு.

7. வெங்கடேஷ் ஷூட் நிறைவு

அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் படம் `Mana Sankara Varaprasad Garu'. இப்படத்தில் வெங்கடேஷும் ஒரு பாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவைடைந்துள்ளது.

8. விக்ரம் குமாரின் அடுத்த படம்!

Vikram Kumar, VD
Vikram Kumar, VD

விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தை விக்ரம் குமார் இயக்க உள்ளார் என தகவல்.

9. தெலுங்கு படத்தில் குல்ஷன் தேவய்யா

Gulshan
Gulshan

சமந்தா நடிப்பில் உருவாகும் தெலுங்குப் படம் `Maa Inti Bangaram' மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா. இவர் சமீபத்தில் காந்தாரா மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். 

10. Ready or Not 2

2019ல் வெளியாகி பெரிய ஹிட்டான படம் `Ready or Not'. இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது, அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com