'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை! - Rosmin| Breakfast
செல்லமே, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களில் வலுவான நாயகி கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் புதிய படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’ இல் கதாநாயகியாக நடித்திருப்பது பெருமை என ரோஸ்மின் கூறுகிறார். ரீமா சென், தமன்னா போன்றோரின் கதாபாத்திரங்களுக்கு ரசிகையாக இருந்த தன்னைப் போலவே, இந்த படத்திலும் உணர்வுப்பூர்வமான, கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான வேடம் ரசிகர்களை கவரும் என நம்புகிறார்.
'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களின் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தற்போது இயக்கியுள்ள படம் `பிரேக்ஃபாஸ்ட்'. இப்படத்தில் கதாநாயகியாக ரோஸ்மின் நடித்துள்ளார். இதில் நடித்த அனுபவம் பற்றி பேசும் போது "'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்த தாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார்.
ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன்.
இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை. 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

