Raj B Shetty
Raj B ShettyPocket Novel

Pocket Novel நான் வில்லன் இல்லை! - ராஜ் பி ஷெட்டி | Raj B Shetty | Thiagarajan Kumararaja

`பாக்கெட் நாவல்' படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக ராஜ் பி ஷெட்டி இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
Published on

தியாகராஜன் குமாரராஜா விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படம் `பாக்கெட் நாவல்'. மேலும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக ராஜ் பி ஷெட்டி இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ராஜ் பி ஷெட்டி "நான் தியாகராஜன் குமாரராஜாவின் ரசிகன். அவருடைய முதல் படமான ஆரண்யகாண்டம் முதல் சீப்பார் டீலக்ஸ் வரை எனக்கு மனப்பாடம். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்தேன். நான் இந்தப் படத்தில் இணைந்ததும் நான் வில்லன் பாத்திரத்தில் நடிப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இதில் நான் வில்லன் இல்லை. மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

VJS, TK
VJS, TKx
Raj B Shetty
டி ராகவன் ரிட்டன்ஸ்... உருவாகிறது டிராகன் 2! | Dragon 2 | Pradheep Ranganathan

விஜய் சேதுபதி, கிஷோர் என சிறந்த நடிகர்கள் மத்தியில் இருக்க முடியும் என்ற எண்ணமே அலாதியான ஆர்வத்தை கொடுக்கிறது. இப்படத்துக்கு இளையராஜா இசை என்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். நான் இருக்கும் படம், நான் இருக்கும் காட்சி இளையராஜா இசையில் இருக்கப்போகிறது என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது." என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com