\
Ilaiyaraaja, Mari Selvaraj
Ilaiyaraaja, Mari SelvarajManjanathi

இளையராஜா இசையில், மாரி செல்வராஜின் `மஞ்சணத்தி' | Ilaiyaraaja | Mari Selvaraj

முதன்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றுகிறார் மாரி. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.
Published on

`பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதனை தொடர்ந்து `கர்ணன்', `மாமன்னன்', `வாழை', `பைசன் காளமாடன்' போன்ற படங்களை கொடுத்து கவனம் ஈர்த்தார். தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

`மஞ்சணத்தி' என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முதன்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றுகிறார் மாரி. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். மாரி செல்வராஜின் ஆறாவது படமான இதில் நடிக்கப் போகும் கலைஞர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகவில்லை. அதே சமயம் 'மஞ்சணத்தி' திரைப்படம் 'வாழை' படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் , அது சிவநைந்தனின் பதின்பருவம் மற்றும் இளமைக் காலத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

முதலில் மாரி அடுத்ததாக தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்க இருந்தார். ஆனால் இப்போது தனுஷ் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் `மஞ்சணத்தி' படத்தை துவங்கிவிட்டார் மாரி. விரைவில் இப்படம் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இளையராஜா சமீபத்தில் தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் இணைந்தார். அதனை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜுடன் இணைந்துள்ளார் இளையராஜா.

Ilaiyaraaja, Mari Selvaraj
"எனக்கு புற்றுநோய் இருந்தது தெரிஞ்சதும்.." - சிவராஜ்குமார் பகிர்ந்த உண்மை | Shiva Rajkumar
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com