I used to get jealous of Prashanth says Vishal
Prashanth, VishalRanjan

"பிரஷாந்தைப் பார்த்து பொறாமைப்படுவேன்!" - விஷால் | Vishal | Prashanth | Ranjan

’செம்பருத்தி’, ’திருடா திருடா’ எல்லாம் நான் தியேட்டரில் விசிலடித்து ரசித்துப் பார்த்த படங்கள். எங்களுக்கு முன்னாள் இருக்கும் பெண்கள் எல்லாம் அவரை சைட் அடிப்பார்கள். மேலும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா படங்களைக் கொடுப்பார்.
Published on

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாள் விழா மற்றும் அவரின் அடுத்த படமான `ரஞ்ஜன்' பட அறிமுக விழா இன்று நடைபெற்றது. இப்படத்தின் மூலம் தேவயானி மகள், ப்ரியங்கா ராஜகுமாரன் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய விஷால், "நான் உதவி இயக்குநராக இருந்தபோதிலிருந்து நான் வியந்து பார்த்த நடிகர் பிரஷாந்த். ’செம்பருத்தி’, ’திருடா திருடா’ எல்லாம் நான் தியேட்டரில் விசிலடித்து ரசித்துப் பார்த்த படங்கள். எங்களுக்கெல்லாம் அப்போது பிரஷாந்தைப் பார்த்துப் பொறாமையாக இருக்கும். எங்களுக்கு முன்னாள் இருக்கும் பெண்கள் எல்லாம் அவரை சைட் அடிப்பார்கள். மேலும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா படங்களைக் கொடுப்பார். என் கலருக்கு தாமதமாகத்தான் வரவேற்பார்கள். இவருக்கு எல்லாம் பயங்கர வரவேற்பு அந்தச் சமயத்தில்.

Ranjan
Ranjan

ஒரு நடிகருக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது, அவருடன் தூணாக யாராவது இருக்க வேண்டும். அப்படி ஒரு தூணாக தியாகராஜன் சார் இருப்பது பிரம்மிக்க வேண்டிய விஷயம். நீங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். உங்களுடைய உழைப்பால்தான் பிரஷாந்த் இவ்வளவு உயர்ந்து நிற்கிறார். தியாகராஜன் சார் பற்றி என்னுடைய அப்பா நிறைய முறை சொல்லி இருக்கிறார். அவர் பிரஷாந்த் பயணத்தை எப்படி வடிவமைத்தாரோ, அதேபோல என்னுடைய பயணத்தை என் அப்பா வடிவமைப்பதாக கூறினார். அவர் உங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டார்.

I used to get jealous of Prashanth says Vishal
"விஜய் சார் என்னையும் சேர்த்து 13 பேர சுட்டார்" - விக்னேஷ் சிவன் சொன்ன ஃபிளாஷ்பேக் | Vignesh Shivan

இப்படத்தின் மூலம் இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். என் நண்பன் கதிரேசன் சாரின் மகன் ஹரி. எல்லா வகையிலும் அவர் மிக நேர்மறையாக இருக்கிறார். அவனுக்கு, இந்த புது பயணத்துக்கு எனது வாழ்த்துகள். இவ்வளவு அன்பான தேவயானிவிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அவரைப் போலவே அவரது அன்பான மகள் ப்ரியங்கா இப்படத்தில் அறிமுகமாகிறார்.

விஷால்
விஷால்புதிய தலைமுறை

பெரிய பாரம்பரியத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. பெரிய திரை மட்டுமல்ல, சின்னதிரையிலும் அவர் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு டார்லிங் ஜிவி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் ’யூத்’ படத்துக்கு பெரிய தூணாக இருந்து வெற்றி கொடுத்திருக்கிறார். தெலுங்கு மாநிலத்தில்கூட ’யூத்’ சக்கை போடு போடுகிறது. இப்போது இளைஞர்கள் அடுத்த தளத்துக்கு வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு சூழலில் இவர்கள் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com