\
I supposed to debut in Bharathiraja sir film says Srikanth
SrikanthPT web

"பாரதிராஜா இயக்கத்தில்தான் நான் அறிமுகமாக வேண்டியது" - ஸ்ரீகாந்த் | Srikanth | Bharathiraja

நீ எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும், என்னுடைய கணிப்பு தவறாகவில்லை எனக் கூறினார்.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், "எனக்கு முதல் படம் கிடைக்காதபோது, பாரதிராஜா சாரின் உதவியாளர் ஸ்ரீதர், ’நான் என் தலைவரிடம்  அழைத்துச் செல்கிறேன் என அழைத்துப் போனார். அப்போது யார் அந்த தலைவர் என எனக்குத் தெரியாது. பார்த்தால், அது பாரதிராஜா சார். என்னைப் பார்த்த ஐந்தாவது நிமிடம், ’லேசா தாடி வளந்துட்டா நீ ஹீரோ, நான் பண்ணுறேன்’ எனச் சொன்னார். அந்தப் படம் சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது.

’நீ எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும், என்னுடைய கணிப்பு தவறாகவில்லை’ எனக் கூறினார். சினிமா துறையில் பலரும் வாழக் காரணம் பாரதிராஜா சார். நல்ல இயக்குநர் கைகளில் சிக்கும் போதுதான் நல்ல நடிகர்கள் மேம்படுகிறார்கள். கலைத்துறையில் திறமையை மட்டுமேதான் அவர் பார்த்தார். அவருடன் நான் பணியாற்றியதில்லை. ஆனாலும் இப்போது அவர் பற்றிப் பேசுகிறேன் என்றால், அதுதான் அவரின் சாதனை. கடைசியாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது அவரைச் சந்தித்தேன். அப்போதும், ’நான் உன்னை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டேன்டா’ என்று கூறினார். நானும் மனோஜும் இணைந்து அவர் இயக்கத்தில் அறிமுகமாக வேண்டியது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது" என்றார்.

I supposed to debut in Bharathiraja sir film says Srikanth
நடிக்க ஆசைப்பட்ட பாரதிராஜா.. கோபத்தில் இயக்குநராக மாறிய கதை.. மின்னிய நட்சத்திரங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com