சூர்யா அண்ணனை பற்றி யோசித்தாலே பாகுபலி தான் நினைவு வரும்! - கார்த்தி | Karthi | Suriya | Karuppu
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு `வீரபத்ருடு' பட Pre-Release நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய கார்த்தி "இந்தப் படத்தில் அண்ணன் கத்தி, சுருட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தான் முதலில் பார்த்தேன். அதுவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு மாஸ் மசாலா படம், பொழுதுபோக்கு படம், குடும்ப படம் என்று கூட சொல்லலாம். ஆனாலும் இது மிகவும் நகைச்சுவையும் அடங்கிய படமாக இருக்கும். விஷ்ணுவின் ஒளிப்பதிவு, சாயின் இசை என படம் எனர்ஜியாக இருக்கிறது. God-u Mode-u பாட்டே அதிர்ந்தது.
Beast Mode-u தெரியும் God-u Mode-u என்பது புதிய பதம். அதன் பிறகு வந்த பாடல்களும் அருமையாக இருந்தது. அண்ணன் நடித்த சில காட்சிகளை பார்த்தேன். இதெல்லாம் அவரால் மட்டுமே செய்ய முடியும், உண்மையில் God-u Mode-u தான். மாஸ்! அவரை பற்றி சிந்தித்தால் பாகுபலி நினைவுக்கு வருகிறது. பிரபாஸ் அந்த சிவலிங்கத்தை எடுத்து செல்வார் அல்லவா. அப்படி எவ்வளவு சுமை கொடுத்தாலும் அண்ணனால் தாங்க முடியும். சினிமாவை கொண்டாடும் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய படம் இது" என்றார்.

