I do this before go to every race says Ajith
AjithkumarRace

"ஒவ்வொரு ரேஸுக்கு செல்லும் முன்பும் நான் செய்யும் விஷயம்!" - அஜித்குமார் | Ajithkumar | Race

உலர்ந்த, ஈரமான இரு நிலையிலான ரேஸும் எனக்குப் பிடிக்கும். பகல், இரவு என்ற பேதமும் எனக்கு இல்லை. பசி மற்றும் தாகத்துடன் ரேஸ் ஓட்ட விரும்பமாட்டேன்.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது கார் ரேஸில் தீவிரமாக இயங்கிவருகிறார். தற்போது துபாயில் நடைபெற உள்ள ரேஸுக்கு தயாராகி வருகிறார். சிம்பு, நயன்தாரா, மாதவன், யுவன் என பல சினிமா பிரபலங்களும் நேரில் அவரைச் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் துபாயில் ரேஸ் சம்பந்தமான ஒரு Rapid Fire கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில், "உலர்ந்த, ஈரமான இரு நிலையிலான ரேஸும் எனக்குப் பிடிக்கும். பகல், இரவு என்ற பேதமும் எனக்கு இல்லை. பசி மற்றும் தாகத்துடன் ரேஸ் ஓட்ட விரும்பமாட்டேன்" எனக் கூறி இருந்தார்.

Ajith
Ajith

மேலும், ”ரேஸ் செல்லுக்கு முன் பின்பற்றும் ஒரு பழக்கம்” என்ன என்ற கேள்விக்கு, "நான் எப்போதும் எனது வலது கையுறையை முதலில் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்" என பதில் அளித்துள்ளார் அஜித்குமார்.

ரேஸ் தாண்டி, சினிமாவில் `குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அஜித்குமார். இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அமையாத சூழலில், அந்த அறிவிப்பு தாமதமாகி வருகிறது.

I do this before go to every race says Ajith
ராம் சரணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்! - மகிழ்ச்சியை பகிர்ந்த தாத்தா சிரஞ்சீவி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com