\
I did one mistake says Ravi Mohan
Ravi MohanJayam

"நான் செய்த ஒரே ஒரு தவறு.." - உணர்ச்சி வசப்பட்ட ரவி மோகன் | Ravi Mohan

சினிமா துறையில் பலரும் தொடர்பு கொண்டு `நீ எதை வேண்டுமானாலும் சொல் ஏற்றுக் கொள்கிறோம். சினிமாவில் இருக்க மாட்டேன் என்று மட்டும் சொல்லவே கூடாது' என்றார்கள்.
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட விருது விழா ஒன்றில் பேசிய போது "எனக்கு இந்த வருடம் 46 வயதாகிறது. அதில் 23 வருடம் நான், என் வாழ்க்கையில் சினிமா துறையில் இருந்திக்கிறேன். அப்படி இருக்கையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். நான் செய்த ஒரு சின்ன தவறு உங்கள் அனைவரையும் காயப்படுத்தியது. தனிப்பட்ட வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் பாதிப் பாதியாக தான் இருந்தது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை நான் எமோஷனலாக 1 சதவீதம் அதிகமாக கவனம் செலுத்திவிட்டேன்.

Ravi Mohan
Ravi Mohan

ஆனால், அதன் பிறகு நீங்கள் கொடுத்த அன்பு பெரியது. சினிமா துறையில் பலரும் தொடர்பு கொண்டு `நீ எதை வேண்டுமானாலும் சொல் ஏற்றுக் கொள்கிறோம். சினிமாவில் இருக்க மாட்டேன் என்று மட்டும் சொல்லவே கூடாது' என்றார்கள். அப்போதிருந்து அதை ஒரு வேதவாக்காக எடுத்துக் கொண்டு, இப்போது எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சினிமாவுக்கும் என்னை விரும்பும் ரசிகர்களுக்கும் என்றும் நான் இனி துரோகம் செய்ய மாட்டேன். கண்டிப்பாக திரும்ப வருவேன்.

எனக்கு அதில் ஒரு சின்ன சந்தோசம் என்ன என்றால், நான் பேசிய விஷயத்தால் மெண்டல் ஹெல்த் பற்றி நிறைய பேர் பேச துவங்கினார்கள். என்னை பலரும் தொடர்பு கொண்டு இதை பற்றி நானும் வெளிப்படையாக பேச விரும்புகிறேன் என சொன்னார்கள். இன்று நான் சிரித்த முகத்துடன் வந்து நிற்க ஒரே ஒரு காரணம் என் ரசிகர்கள் மட்டும் தான்" என்றார்.

I did one mistake says Ravi Mohan
”பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் விருது வழங்க வேண்டும்!” - தமிழக அரசுக்கு பேரரசு கோரிக்கை | Perarasu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com