\
I amazed with Mysskin music says Vetrimaaran
VetrimaaranTrain

"மிஷ்கினின் இசை வியப்பூட்டுகிறது!" - வெற்றிமாறன் | Vetrimaaran | Mysskin | Train

மிஷ்கின் படங்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில் மனிதர்களுக்குள் இருக்கும் 'கிரே ஷேடை' தாண்டி இருக்கும் மனிதநேயத்தை அவர் வெளிப்படுத்துவார்.
Published on

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் `ட்ரெய்ன்'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமாறன் பேசியபோது, "இன்று இசையமைப்பாளர் மிஷ்கின் அதைப்பற்றித்தான் பேசணும். அவர், எப்போதும் புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார். இங்கு மிஷ்கின் பாடியதும், ஸ்ருதி பாடியதும் மிகவும் பிடித்தது. அவர் எப்போதுமே புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருப்பார். ’மியூசிக் கற்றுக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறி எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார். ஆனால், ஒரு முழு நீளத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு எப்படி இவ்வளவு தன்னம்பிக்கை வந்தது என்று நான் வியந்ததுண்டு. ஆனால், இந்த மாதிரி பாடல்களை உருவாக்க முடியும் என்றால் அந்த நம்பிக்கை வரும் என்றுதான் நினைக்கிறேன்.

மிஷ்கின் படங்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில் மனிதர்களுக்குள் இருக்கும் 'கிரே ஷேடை' தாண்டி இருக்கும் மனிதநேயத்தை அவர் வெளிப்படுத்துவார். நாமும் அவர் படங்களைப் பார்க்கும்போது அப்படிப்பட்ட உணர்வுப்பூர்வமான தருணங்களை எதிர்பார்த்தே செல்வோம். மிகக் சில நிமிடங்களிலேயே பார்ப்பவர்களை எமோஷனலாகத் தொட்டு, கதாபாத்திரங்களை நம்மோடு அரவணைக்கச் செய்யும் ஒரு மாபெரும் எழுத்தாளர் அவர். படத்திற்காகத் தன் 100% உழைப்பைக் கொடுப்பார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போதே நான் செட்டிற்குச் சென்றிருந்தேன். ட்ரெயின்தான் களம் என முடிவுசெய்து அதற்குள் அவர்கள் செய்த பரிசோதனை முயற்சிகளைப் பார்த்தேன். ஓர் இயக்குநராக அந்த ரிஸ்க்கை எடுத்துப் பரிசோதிக்க எவ்வளவு தைரியம் வேண்டுமோ, அதே அளவு துணிச்சலோடு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார் இந்த ரிஸ்க்கை ஏற்றுப் படத்தைத் தயாரித்துள்ளார்.

I amazed with Mysskin music says Vetrimaaran
இளமையான கெட்டப்பில் சிவராஜ்குமார்! | Shivarajkumar | Welcome to Wildlife

'விடுதலை' படத்தில் வொர்க் பண்ணியதில் இருந்தே விஜய் சேதுபதி எங்களுடைய பல பயணங்களில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, மிஷ்கின் படங்களில் இருக்கும் அந்த நல்ல குணம் நிஜ வாழ்க்கையிலும் நிறைந்த ஓர் உன்னத மனிதர். யாருக்காவது ஒரு மனவருத்தம் இருந்தால்கூட, அவர்களுக்குள் இருக்கும் நல்லதை மட்டுமே பார்க்கக்கூடிய குணம் கொண்டவர்.

Vetrimaaran
VetrimaaranTrain

ஒரு நடிகராக காட்சிகளை எப்படி உயர்த்துவார் என தெரியும், மிஷ்கினும் அதைச் சொன்னார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படப்பிடிப்புத் தளம் எவ்வளவு கலகலப்பாகவும் அன்பாகவும் இருந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. இந்தப் படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு சிறந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com