Habeebi will speak about unity beyond religious difference says Meera Kathiravan
Meera Kathiravan, Kasthuri RajaHabeebi

மத வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையைப் பேசும் `ஹபீபி' - மீரா கதிரவன் | Meera Kathiravan | Habeebi

’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது.
Published on

`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது கஸ்தூரி ராஜா நடிப்பில் `ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ளது இப்படம். சில மாதங்களாக இப்படம் குறித்த நல்ல வகையில் பிரபலங்கள் பலரும் மேடைகளில் பேசி வருகின்றனர்.

Meera Kathiravan
Meera Kathiravan

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து அதில் நடித்துள்ள கஸ்தூரி ராஜா, ” ‘ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களைக் கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.

Habeebi will speak about unity beyond religious difference says Meera Kathiravan
"விஜய் சேதுபதி சார் நினைத்திருந்தால் என்னை நிராகரித்து இருக்கலாம்.." - வடிவேல் முருகன் | Kaataan

இயக்குநர் மீரா கதிரவன், “ ’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும்.

Meera Kathiravan, Kasthuri Raja
Meera Kathiravan, Kasthuri RajaHabeebi

ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com