கேப்டன் மில்லர் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த செம அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 15ஆம் நாளில் படம் வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. பின்னர் பொங்கல் அன்று படம் வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்தது.

Team captain miller
மீண்டும் ‘ஆளவந்தான்’; தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட போஸ்டர்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதன்படி தனுஷ் பாடியுள்ள நாந்தாண்டா நீதி என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com