`ஜனநாயகன்' படத்தில் ஏன் பணியாற்றவில்லை... - பதில் சொன்ன ஜிப்ரான் | Jana Nayagan
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக்கி சமீபத்தில் வெளியான படம் `ஆர்யன்'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சில கேள்விகளுக்கு பதில் அளித்த ஜிப்ரான், `ஜனநாயகன்' படத்தின் ஏன் பணியாற்றவில்லை என்பது பற்றியும் தெரிவித்திருந்தார்.
தீரன், வலிமை, துணிவு என மூன்று படங்கள் ஹெச் வினோத்துடன் பணியாற்றினீர்கள். `ஜனநாயகன்' படத்தில் ஏன் நீங்கள் பணியாற்றவில்லை. வினோத்திடம் கேட்டீர்களா?
"அது அவருடைய தேர்வு தான் என்னுடைய கையில் எதுவும் இல்லை. வினோத் என்று இல்லை நான் எந்த இயக்குநரிடமுமே நான் வாய்ப்பு கேட்டதில்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு டோன் இருக்கிறது. ஒருவேளை ராட்சசன் நான் செய்யாமல் வேறு ஒரு இசையமைப்பாளர் செய்திருந்தால் வேறு ஒரு விதத்தில் வந்திருக்கும். நான் செய்ததால் ஒரு விதத்தில் வந்தது. அது அந்த இயக்குநருக்கு தேவை என்றால், அவர்களே நம்மை அழைப்பார்கள். அதுதான் இப்போது ஆர்யன் படத்திலும் நடந்தது."
சிவனுக்கு ஓடி ஓடி பாடல் செய்தது போல, வேறு எந்த கடவுளுக்கு பாடல் போடா விருப்பம்?
"சிவனுக்கு `ஓடி ஓடி' பாடலை முடித்தோம். முருகருக்கு `வேல் மாறல்' என்ற ஆல்பம் வெளியிட்டோம். அடுத்து இன்னும் நிறைய செய்யும் திட்டமிருக்கிறது. தேவாரம் எடுத்து செய்ய வேண்டும் என விருப்பம். ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்படும்" என்றார்.

