Gautham Ram Karthik
Gautham Ram KarthikROOT

கௌதம் கார்த்திக்கின் Sci-Fi க்ரைம் த்ரில்லர் ROOT படப்பிடிப்பு நிறைவு! | Gautham Ram Karthik

Running Out of Time என்பதே இப்படத்தின் தலைப்பு ROOTக்கான அர்த்தம். இப்படம் ஒரு Sci-Fi க்ரைம் த்ரில்லராக  உருவாகியுள்ளது.
Published on

கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் சூரியபிரதாப் S இயங்கிவந்த படம் `ROOT'. பாவ்யா த்ரிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அபர்ஷக்தி குரானா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என அறிவித்துள்ளனர்.

Running Out of Time என்பதே இப்படத்தின் தலைப்பு ROOTக்கான அர்த்தம். இப்படம் ஒரு Sci-Fi க்ரைம் த்ரில்லராக  உருவாகியுள்ளது. அறிவியலையும் மனித உணர்வுகளையும் இணைக்கும் தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டுள்ளதாம் இப்படம்.

Gautham Ram Karthik
Gautham Ram KarthikROOT

படத்தைப் பற்றி இயக்குநர் சூரியபிரதாப் கூறுகையில் "ROOT படம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு பயணம். எங்கள் உழைப்பையும், அர்ப்பணிப்பையும், முழுமையாக கொடுத்து ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை உருவாக்கியுள்ளோம். அதை விரைவில் பார்வையாளர்களுடன் பகிர்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com