
Alethea Jones இயக்கியுள்ள சீரிஸ் `56 Days'. சூப்பர்மார்கெட் ஒன்றில் சந்தித்துக் கொள்ளும் ஆலிவர் - சியாரா ஜோடி காதலிக்க துவங்குகிறார்கள். 56 நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு சிக்கல் வர, அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.
Gabriel Basso, Luciane Buchanan நடிப்பில் இரு சீசன்களாக வெளியான சீரிஸ் `The Night Agent'. இதன் அடுத்த சீசன் தற்போது வருகிறது. இம்முறை என்ன மிஷன் என்பதே கதை.
Jennifer Garner நடித்துள்ள `The Last Thing He Told Me'. தொலைந்து போன கணவனை தேடும் பெண்ணின் கதை. அக்கதையின் தொடர்ச்சியே இந்த இரண்டாவது சீசன்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராகுல் பேட், சன்னி லியோன் நடித்துள்ள படம் `Kennedy'. முன்னாள் காவல் அதிகாரியின் அதிரடி சம்பவங்களே கதை.
ஆலன் ஜோபி ஜான் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் நடித்துள்ள படம் `Chatha Pacha'. ஒரு மல்யுத்த க்ளப்பில் நடக்கும் விஷயங்களே கதை.
சமீர் இயக்கிய படம் `Tu Meri Main Tera Main Tera Tu Meri'. காதல் ஜோடி இருவருக்கும் குடும்பத்தினர் தரும் அழுத்தங்களே கதை.
இந்த வாரம் தமிழில் புதிதாக முகம் தெரிந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சில சின்ன படங்கள் தாண்டி பெருவாரியாக ஓடுவது முன்னர் வெளியான சில படங்கள், காதலர் தினத்துக்கு ரீ-ரிலீஸ் ஆன `உயிருள்ளவரை உஷா', `மின்னலே', `காதலர் தினம்', `மௌனம் பேசியதே', `விண்ணைத்தாண்டி வருவாயா' படங்கள். இதை தாண்டி இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆக உள்ள `கில்லி', `துணிவு', `சூது கவ்வும்' படங்களும் தான் வருகின்றன.
சுஹாஸ் நடித்துள்ள படம் `Hey Balwanth'. தன் அப்பாவின் தொழிலை கையில் எடுக்கும் ஹீரோவுக்கு வரும் சிக்கல்களே கதை.
விஜய் ராகவேந்திரா நடித்துள்ள படம் `Second Case of Seetharam'. 2021ல் வெளியான `Seetharaam Benoy Case Number Eighteen' படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த பாகத்தில் சீரியல் கில்லரை கண்டுபிடித்த ஹீரோ, இந்த பாகத்தில் சைக்கோ கொலைகாரனை துரத்துவதே கதை.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி, கனி குஸ்ருதி நடித்துள்ள படம் `Assi'. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசும் படம்.
சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடித்துள்ள படம் `Do Deewane Seher Mein'. ஒரு காதல் ஜோடி தங்கள் அக சிக்கல்களில் இருந்து வெளியே வருவதே கதை.
Tyree Dillihay இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Goat'. ஒரு ஆடு, விளையாட்டில் சாதிக்க எடுக்கும் முயற்சிகளே கதை.
Gore Verbinski இயக்கியுள்ள படம் `Good Luck, Have Fun, Don't Die'. AI-க்கு எதிராக போராடி டைம் டிராவல் செய்து வரும் நபரின் சாகசங்களே கதை.