எதிர்நீச்சல்: குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமே இல்லாதவரா?-புதிய வியூகத்தை கையிலெடுக்கும் இயக்குநர்!

ஆதிகுணசேகரனுக்கு பதில் வேல ராமமூர்த்தியை நடிக்க வைத்தது சீரியல் குழு அவரது எண்ட்ரி மிரட்டலாக இருந்தாலும் மாரிமுத்து மாதிரி இல்லை

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனுக்கு பதில் நடிக்கும் வேலராமமூர்த்தி மீது ம்க்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஆதிகுணசேகரின் நடிப்பாலும், வசனத்தாலும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த நாடகம் தான் எதிர்நீச்சல். ஆனால் மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து ரசிகர்கள் கலகத்தில் இருந்தனர். இதில் ஆதிகுணசேகரனுக்கு பதில் வேல ராமமூர்த்தியை நடிக்க வைத்தது சீரியல் குழு அவரது எண்ட்ரி மிரட்டலாக இருந்தாலும் மாரிமுத்து மாதிரி இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். வில்லத்தனத்தை அழகாக செய்த மரிமுத்து அத்தனை பேரையும் நடிப்பால் கட்டிப் போட்டார். ஆனால் வேலராமமூர்த்தியின் வில்லத்தனம் குண்சேகரனின் பாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com