நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த இயக்குநரா?

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ajith
ajithpt desk

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் பைக் பயணம் மேற்கொண்டதால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vidaa Muyarchi - AjithKumar, Magizh Thirumeni
Vidaa Muyarchi - AjithKumar, Magizh Thirumeni

இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர அஜித் ரசிகரான இவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தபோது கூறிய கதை அஜித் குமாருக்கு பிடித்துப்போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com