“செல்லம் அப்படியே கொஞ்சிச்சு என்னைய...”- விஜய் குறித்து மிஷ்கின் நெகிழ்ச்சி! #Video

“விஜய்யை 22 வருஷத்துக்கு அப்பறம் மீட் பண்ணேன். செல்லம் அப்படியே கொஞ்சுச்சு என்னைய” என்று இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
vijay
vijayFile image

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ப்ரிவியூ ஷோ-வை நேற்று கண்டு ரசித்த இயக்குநர் மிஷ்கின், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

miskin
miskinpt desk

அப்போது பேசிய அவர், “கழுவேத்தி மூர்க்கன், கத்தி மேல் நடக்குற மாதிரி ஒரு கதை. நல்லா எடுத்திருக்காங்க. இந்த படத்தை பார்த்து நல்லா என்ஜாய் பண்ணினேன். படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்த எல்லோரோட நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. இமானோட மியூசிக்... குறிப்பா ரீ ரெக்கார்டிங் மிகவும் சிறப்பாக இருக்கு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார். தொடர்ந்து அவரின் அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மிஷ்கின், “தயாரிப்பாளர் தாணு சாருக்கு படம் பண்றேன். விஜய் சேதுபதிக்கு கதை எழுதிக்கிட்டு இருக்கேன். பிசாசு 2 விரைவில் வரும். நல்ல படம், நல்லா வந்துருக்கு. எல்லோருக்குமே பிடிக்கும், பார்க்கலாம். லியோ படம் என்னோட பகுதிகள் முடிஞ்சிருச்சு. மாவீரன் படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. மாவீரன் முழு படத்துல வில்லனா நடிச்சிருக்கேன். சிவகார்த்திகேயன் கூட பணியாற்றியதில், ரொம்ப சந்தோஷம். ரொம்ப தன்மையான பையன்!

vijay
vijaypt desk

விஜய்யைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 22 வருஷத்துக்கு அப்புறம் மீட் பண்னேன். செல்லம் அப்படியே கொஞ்சுச்சு என்னைய...! அந்த படமும் (லியோ) பெரிய வெற்றியடையும். எல்லா படமும் வெற்றியடையும். எல்லா படமும் வெற்றியடையணும்” என்றார்.

இயக்குநர் மிஷ்கினின் வீடியோவை இங்கே காண்க...

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com