லியோ வெற்றிபெற ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த லோகேஷ் கனகராஜ்!

லியோ படம் வெற்றிபெற வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்தார்.
Lokesh kanagaraj in Rameswaram temple
Lokesh kanagaraj in Rameswaram templePuthiya thalaimurai

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார் அவர்.

Lokesh kanagaraj in Rameswaram temple
Lokesh kanagaraj in Rameswaram templePuthiya thalaimurai

தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். அப்போது லோகேஷ் கனகராஜுடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திருக்கோயில் வாசலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறிச் சென்றார்.

Lokesh kanagaraj in Rameswaram temple
லியோ திரைப்பட வழக்கு: “அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்கள் வெளியாவதற்கு முன்பும்கூட அவர் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com