ஹரீஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ பட ரிலீஸ் எப்போது? - வெளியான அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் ரமேஷ், ‘எல்.ஜி.எம்.’ படத்தை இயக்கியுள்ளார்
Dhoni unveiled LGM - Let’s Get Married first Look Poster
Dhoni unveiled LGM - Let’s Get Married first Look PosterTwitter

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழில் ஹரீஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘Let’s get married-LGM’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தோனி, அவரது மனைவி சாக்ஷி தோனி, ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். காதல் கதையை மையமாக வைத்து வெளியான ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநரே, இசையும் அமைத்துள்ளார். பிரதீப் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com