Dhanushs next film director conformed
Tamizharasan PachamuthuD56

தனுஷின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்! | D56 | Dhanush

முன்பு தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என சொல்லப்பட்டது.
Published on

`லப்பர் பந்து' மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகுந்த அறிமுகம் கொடுத்தவர் தமிழரசன் பச்சமுத்து. இப்படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதை எக்ஸ் தளத்தில் அறிவித்தார். மேலும் ’இட்லிக்கடை’ ஆடியோ லான்சிலும் அறிவித்தார் தமிழரசன் பச்சமுத்து.

தற்போது இப்படத்துக்கான வேலைகள் பரபரப்பாக துவங்கியுள்ளது. குறிப்பாக படப்பிடிப்புக்கான இடங்களை பார்ப்பதில் களம் இறங்கியுள்ளார் தமிழரசன் பச்சமுத்து. முன்பு தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்தப் படத்தை தமிழரசன் பச்சமுத்துதான் இயக்குகிறார் என்பதை தமிழரசனும், தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸும், நடிகர் தனுஷும் உறுதி செய்துள்ளனர்.

சமீபத்தில், டான் பிக்சர்ஸின் ஆகாஷ் பாஸ்கரன் ஒரு பேட்டியில் இப்படம் பற்றி, இப்படத்தை தயாரிப்பதாகவும், படப்பிடிப்பு கோடையில் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள `கர' ஏப்ரல் 30 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் `D55' படத்தில் நடிக்கிறார். அதற்குப் பிறகு D56 படத்தில் தமிழரசன் படத்தில் இணைகிறார் தனுஷ்.

Dhanushs next film director conformed
நடிகராக அறிமுகமாகும் அஜித்தின் சகோதரர்! | Ajithkumar | Anilkumar

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com