Dhanush's Kara film name started a controversy
DhanushKara

கர vs கரா.. கோலிவுட்டில் முளைத்த புது சர்ச்சை! | Dhanush | Kara

தனுஷ் நடித்துள்ள `கர' என்ற பெயரும், இப்படத்தின் `கரா' என்ற பெயரும் ஒரே மாதிரி இருப்பதன் காரணமாக, சிரமம் ஏற்பட்டுள்ளது என புகாரை முன்வைத்திருக்கிறது படக்குழு.
Published on

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கரா', மே 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தனுஷ் நடித்துள்ள `கர' என்ற பெயரும், இப்படத்தின் `கரா' என்ற பெயரும் ஒரே மாதிரி இருப்பதன் காரணமாக, சிரமம் ஏற்பட்டுள்ளது என புகாரை முன்வைத்திருக்கிறது படக்குழு. இது பற்றிய விளக்கத்தைப் படத் தயாரிப்பு தரப்பிலிருந்து பேசிய பிரேம் நாத் கூறியபோது, "2022இல் எங்கள் ஸ்ரீபூவாயி மூவீஸ் சார்பில் `கரா' என்ற தலைப்பை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டி தலைப்பைப் பதிவு செய்தோம். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறோம்.

இதனை முறையாக பதிவுசெய்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். அதுகூடச் செய்திகளில் வெளியிட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இயக்குநர், இந்த தலைப்பை தனுஷ் படத்துக்கு வைத்திருக்கிறார்கள் என அனுப்பினார். அதிர்ச்சியடைந்த நான், அடுத்தநாளே தயாரிப்பாளர் சங்கத்துக்குச் சென்றோம். அங்கு யாருமே இல்லை. அங்கிருந்த ஒரு பெண் மட்டும்தான் பேசுகிறார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த விஷயமாக அலைகிறோம்.

Dhanush's Kara film name started a controversy
'நயன்தாராவுக்கு கோபம் வந்தால் டெரர் தான்..' - விக்னேஷ் சிவன்

ஏதேதோ சொல்லி எங்களை அலைக்கழிக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்தபிறகுகூட நாங்கள் சென்றோம், ’அப்போதும் சொல்கிறேன் சார்’ என்ற பதில் மட்டும்தான் வருகிறது. இப்போது இந்தப் படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு எடுத்துவரும் நேரத்தில், அந்தப் படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Dhanush
DhanushKara

இதற்கு முழுப் பொறுப்பு தயாரிப்பாளர் சங்கம் மட்டும்தான். இதற்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் ஓரிரு நாளில் எடுக்க வேண்டும். முறையான ஆவணங்கள் எல்லாம் எங்கள் கையில் உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com