Dhanush, Vignesh Raja
Dhanush, Vignesh RajaMaari

"மாரி கேரக்டர்ல நடிக்கறது கஷ்டம்னு தனுஷ் சார் சொன்னார்" - விக்னேஷ் ராஜா | Dhanush | Maari | Kara

குழந்தைகளின் பலூனை சிகரெட்டை வைத்து வெடிக்க செய்யும் அளவுக்கு ஒரு மோசமான ரௌடி. ஆனாலும் அவன் நேசிக்கப்படும் ஒருவனாக இருக்க வேண்டும்.
Published on
Summary

‘கர’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா, பள்ளி நாட்களில் தேர்வு காலத்திலும் திருட்டு VCD மூலம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ பார்த்து தனுஷின் நடிப்பில் கவரப்பட்ட நினைவுகளை கூறுகிறார். பின்னர், தனுஷுடன் பணியாற்றிய அனுபவத்தில், அவரிடம் மிகவும் சவாலான கதாபாத்திரம் எது என கேட்டபோது, அவர் ‘மாரி’ வேடமே கடினம் என அவர் சொன்னதை பகிர்ந்துள்ளார்.

தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் தெடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அப்படி ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி குறிப்பிட்ட விக்னேஷ் ராஜா, தனுஷின் ரசிகராக இருந்ததில் இருந்து, இப்போது அவருடன் பணியாற்றியுள்ளது எப்படி இருந்தது எனக் கூறினார்.

Dhanush's Kara film name started a controversy
DhanushKara

அது குறித்து கூறுகையில் "தனுஷ் சார் பற்றிய என்னுடைய ஆரம்பகால ஞாபகம் `திருவிளையாடல் ஆரம்பம்' படம் பார்த்தது. அப்போது நான் 10வது படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். அது தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வெளியானது. எனவே தியேட்டருக்கு செல்ல என் வீட்டில் அனுமதிக்கவில்லை. எனவே திருட்டு வி சி டி வாங்கி லேப்டாப்பில் தான் பார்த்தேன். நான் எப்போதும் அப்படி சிரித்ததில்லை. அவ்வளவு அந்தப் படத்தை ரசித்தேன்.

Dhanush
DhanushMaari
Dhanush, Vignesh Raja
நீங்கள் எப்போது அழுதீர்கள்..? "மிகுந்த தனிமையில்.." - மாளவிகா மோகனன் பகிர்ந்த வருத்தம்!

ஒவ்வொரு முறை தனுஷ் சாரிடம் மாற்றம் செய்த ஸ்க்ரிப்டை கொடுக்க செல்லும் போதும் ஏதாவது ஒரு உரையாடல் நிகழும். அப்படி ஒருமுறை சந்திக்கையில் `நீங்கள் நிறைய ரோலில் நடித்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிக சவாலான வேடம் எது?' எனக் கேட்டேன். `மாரி தான் அவருக்கு சவாலான வேடம் என்றார். குழந்தைகளின் பலூனை சிகரெட்டை வைத்து வெடிக்க செய்யும் அளவுக்கு ஒரு மோசமான ரௌடி. ஆனாலும் அவன் நேசிக்கப்படும் ஒருவனாக இருக்க வேண்டும். அது கத்தி மேல் நடப்பதற்கு சமம். அதற்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது' எனக் கூறினார்." என்றா விக்னேஷ் ராஜா.

Dhanush, Vignesh Raja
விஜய் சாருக்கு நான் சொன்ன கதை பிடித்தது! - ரத்னகுமார் | Rathnakumar | Vijay

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com