Cooli Audio launch
RajinikanthCoolie

Coolie ஆடியோ லாஞ்ச் காலைலயே பார்க்கணுமா..!

கூலி பட விழா: ரஜினி, ஸ்ருதி, சத்யராஜ் இணைந்து கொண்டாட்டம்
Published on

கூலி பட விழா Sun NXT-இல் ஆகஸ்ட் 10 காலை 10 மணிக்கு முன்னோட்ட நிகழ்வுடன் தொடங்குகிறது.

இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.

ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன் ஒலித்தது, மேலும் கூலி படத்தில் உழைத்த பிரபலங்கள் கலைஞர்கள், கூலி படத்தின் இசை மற்றும் படத்தின் மாயாஜாலத்தைக் கொண்டாட மேடை ஏறியதும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.  இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது. தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார். பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் சாரின் இதயப்பூர்வமான பேச்சு, ரஜினிகாந்த் வெறும் நட்சத்திரம் அல்ல - அவர் நம்மில் நிறைந்திருக்கும் ஒரு உணர்வு என்பதை நமக்கு நினைவூட்டின.

இந்த மாபெரும் விழா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் ஒரே இடத்தில் திரட்டப்பட்டுள்ளது. August 10 காலை 10 மணிக்கு Sun NXT-இல், அதே நாள் மாலை 6:30 மணிக்கு Sun TV-வில் முழு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com