இன்று வெளியாகிறது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.
கேப்டன் மில்லர்
கேப்டன் மில்லர்PT

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் பீரியட் ஆக்ஷன் படமான 'கேப்டன் மில்லர்' திரைப்படம், தனுஷ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதன் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

1980-களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் மற்றும் மூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் நாகூரன் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர். 'Saregama' ஆடியோ உரிமையையும் அமேசான் பிரைம் வீடியோ OTT உரிமையையும் பெற்றுள்ளன. இந்த படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சங்கரேஸ்வரி.S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com