Bose Venkat
Bose VenkatBrothers and Sisters

‘உப்பு புளி காரம்’, `போலீஸ் போலீஸ்' இயக்குநரின் அடுத்த சீரிஸ்! | Brothers and Sisters

இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, துணை பாத்திரங்களில் மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
Published on

தமிழ் மொழியில் நிறைய சீரிஸ்களை தொடர்ந்து வெளியிடும் ஓடிடி தளம் ஜியோ ஹாட்ஸ்டார். ‘உப்பு புளி காரம்’, `போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போது புதிதாக இந்த தளத்தில் வெளியாகவுள்ள சீரிஸ் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’. இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, துணை பாத்திரங்களில் மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி வருகிறார்கள்.

Bose Venkat
கணவர் பேசப் பேச கண்கலங்கி அழுத ஜெனிலியா! | Genelia | Riteish Deshmukh | Raja Shivaji

நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதை, நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்திருக்கும் உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது. 100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை 'உப்பு புளி காரம்', 'போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மே மாதம் முதல் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடர் ஜியோஹாட்ஸ்டாரில் ஒவ்வொரு வாரமும் தொடரின் எபிசோட் வெளியாக உள்ளது.

Bose Venkat
”நான் லவ் தான பண்ணேன்.. போதும் நிறுத்துங்க” - வைரல் யாமினி வீடியோ வெளியீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com