
Zendaya நடித்து இரு சீசன்களாக வெளியான சீரிஸ் `Euphoria'வின் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் வெளியாகிறது. இரண்டாம் சீசனுக்கு பிறகு ஐந்தாண்டுகள் கழித்து துவங்கும் இந்தக் கதையில் நண்பர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.
Elle Fanning நடித்துள்ள சீரிஸ் `Margo's Got Money Troubles'. தன் மகளை வளர்க்க சிரமப்படும் தாய் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளுமே கதை.
Jake Schreier இயக்கி 2023ல் வெளியான சீரிஸ் Beef. அதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகிறது. இளம் தம்பதியான ஆஸ்லி - ஆஸ்டின் வாழ்க்கையை மையப்படுத்தி நகர்கிறது கதை.
ரமேஷ் இந்திரா இயக்கி நடித்துள்ள சீரிஸ் `Pochamma'. கட்டுமான வேலைக்காக ஊரில் உள்ள பூச்சம்மா சிலை அகற்றப்பட, அதன் பின் நடக்கும் விஷயங்களே கதை.
நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் விஜய் வர்மா நடித்துள்ள சீரிஸ் `Matka King'. கூதாட்ட விடுதி துவங்கும் ஒரு நபரை பற்றிய கதை.
ராஜ்குமார் ராவ், சன்யா மல்ஹோத்ரா நடித்துள்ள படம் `Toaster'. எதிலும் கஞ்சம் பிடிக்கும் ராம்காந்த் ஒரு ப்ரெட் டோஸ்டரினால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
Chandler Levack இயக்கியுள்ள படம் `Roommates'. அறைத்தோழிகளான Devon - Celeste இடையிலான நட்பை பற்றி சொல்லும் படம்.
பவன் கல்யாண் நடிப்பில் ஹரீஷ் ஷங்கர் இயக்கிய படம் `Ustaad Bhagat Singh'. போலீஸ் ஹீரோவை எதிர்க்கும் வில்லன், அவரை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதே கதை.
ஜீது இயக்கிய படம் `Sambhavam Adhyayam Onnu'. கேரளா - தமிழ்நாடு எல்லையில் தொலைந்து போன காவலரை தேடும் தேடுதல் வேட்டையே கதை.
கென் கருணாஸ் இயக்கி நடித்த படம் `யூத்'. காதலுக்காக ஏங்கும் பலாலி மாணவனின் இரண்டாண்டு கால பள்ளி வாழ்க்கையை கூறும் படம்.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி நடித்த படம் `Assi'. பாலியல் துன்புறுத்தலை மையப்படுத்திய கோர்ட் ரூம் டிராமாவே கதை.
ரவி இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடித்த படம் `Do Deewane Seher Mein'. மும்பையில் சந்தித்துக் கொள்ளும் இருவரின் காதலே கதை.
ஹிமேஷ் ரேஷ்மியா, பிரபுதேவா நடித்த படம் `Badass Ravikumar'. ரெட்ரோ ஸ்டைல் ஹீரோ வில்லன் கதையே படம்.
டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடித்துள்ள படம் `Pallichattambi'. சட்டம்பி என்ற நபரால் உருவாகும் சிக்கல்களே படத்தின் கதை
ரதீஷ் பொடுவல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Oru Durooha Saahacharyathil'. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஹீரோ வீட்டில் தஞ்சம் புக சிலர் வருகிறார்கள். அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் `Bhooth Bangla'. தன் குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனையில் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார் ஹீரோ. அதில் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியார் நடித்துள்ள படம் `மிஸ்டர் X'. ரகசிய உளவாளிகளின் சாகசங்களே கதை.
நாக சௌர்யா நடித்துள்ள படம் `Bad Boy Karthik'. பொறுப்பே இல்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு தன் சகோதரிக்கு நியாயம் பெற்று தரவேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன என்பதே கதை.
ஷராஃபுதீன் நடித்துள்ள படம் `Madhuvidhu'. ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் வீட்டில் வசிக்கும் மணமகன் அமிர்தராஜின் திருமணத்துக்கு ஏற்படும் தடைகளே கதை.
Bob Odenkirk நடித்துள்ள படம் `Normal'. அமைதியான சிறு நகரத்தை சேர்ந்த ஷெரீஃப், ஒரு வாங்கிக் கொள்ளையை எப்படி தடுக்கிறார் என்பதே கதை.
Lee Cronin இயக்கியுள்ள படம் `The Mummy'. எட்டு வருடங்களுக்கு முன்னர் தொலைந்து போன மகள் திரும்ப வீட்டுக்கு வர, அதன் பின் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.