
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்காக அமெரிக்காவின் Lola VFX நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதில் சிவா தோற்றத்தை முழு ஸ்கேன் செய்துள்ளனர். இந்தப் படம் காலத்தை மையமாக கொண்ட ஒரு சைன்ஸ் பிக்ஷன் படம் எனசொல்லப்படுகிறது. மேலும் இதே Lola VFX நிறுவனம் தான் GOAT படத்திலும் பணியாற்றியது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் SURIYA 47 படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அரசன்' படத்தின் படப்பிடிப்பு இன்று கோவில்பட்டியில் துவங்கியுள்ளது. டிசம்பர் 17க்கு பிறகு சென்னைக்கு வர இருப்பதாக தகவல்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள `LIK' படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக இருந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு தள்ளி போவதாக தகவல்.
ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறாராம் ரஜினி. `படையப்பா'வை மறுபிறவி எடுத்து வந்தாவது பழிவாங்குவேன் என கூறிய நீலாம்பரி பாத்திரத்தை மையமாக வைத்து, படையப்பாவின் இரண்டாம் பாகத்துக்கான கதை விவாதம் நடந்து வருவதாக ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டியில் தகவல். படத்துக்கு பெயர் நீலாம்பரி.
`ஹார்ட் பீட்' சீரிஸ் மூலம் பிரபலமான குரு லக்ஷ்மன் மற்றும் பாடினி குமார் தற்போது `Heartiley Battery' என்ற சீரிஸில் இணைந்து நடித்துள்ளனர். இந்த சீரிஸ் ஸீ5 தளத்தில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்து வரும் `டாக்சிக்' படம் இன்னும் 100 நாட்களில் அதாவது 2026 மார்ச் 19 வெளியாகவுள்ளது.
ஹரீஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள `Ustad Bagath Singh' படத்தின் Dekhlenge Saala பாடல் புரோமோ வீடியோ வெளியீடு. முழுப்பாடல் டிசம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநர் வி சாந்தாராம் பயோபிக் அவரது பெயரிலேயே உருவாகிறது. சித்தார்த் சதுர்வேதி இப்படத்தில் சாந்தாராமாக நடிக்கிறார். சாந்தாராமின் மனைவி பாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜீத் ஷிரிஷ் தேஷ்பாண்டே இப்படத்தை இயக்குகிறார்.