வெற்றிமாறன் + சிம்புவின் `அரசன்' படத்தில் அனிருத்! உறுதியான கூட்டணி | Arasan | Anirudh | Vetrimaaran
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படம் `அரசன்'. சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படம் வடசென்னை யுனிவர்சில் உலகில் நடக்கும் ஒரு கதையாக உருவாகிறது. இப்படத்திற்காக முதன் முறை அனிருத் உடன் கை கோர்த்திருக்கிறார் வெற்றிமாறன்.
இப்படத்தின் ப்ரோமோ டீசர் வெற்றிமாறனின் 50வது பிறந்தநாளான செப் 4ம் தேதி வெளியிடப்பட்டது. முழு ப்ரோமோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் அறிவித்தாலும், ப்ரோமோவை திரையரங்கிலும் வெளியிட திட்டமிட்டார்கள். எனவே தற்போது அரசன் ப்ரோமோ இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திரையரங்கில் மாலை 6 மணிக்கு வெளியாகிறது. யூ ட்யூபில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது. இதுவரை அனிருத் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் அனிருத் பெயருடன் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு.
வெற்றிமாறன் இதுவரை ஜி வி பிரகாஷ் தவிர்த்து சந்தோஷ் நாராயணன், இளையராஜா ஆகிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். அனிருத் - வெற்றி கூட்டணி முதல் முறை இணையும் படமாக அரசன் அமைந்துள்ளது. மேலும் பல வருடங்களாக சிம்பு - அனிருத் நல்ல நண்பர்கள் என்றாலும் அவர்கள் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. எனவே சிம்பு - அனிருத் கூட்டணியும் முதன் முறை இப்படத்தில் இணைந்துள்ளது.