\
Andrea Jeremiah
Andrea JeremiahArasan

அரசன்ல சிம்புவுக்கு அம்மாவா..? ஆண்ட்ரியா சொன்ன பதில்! | Arasan | Andrea | Silambarasan

சமீப காலமாக இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக ஆண்ட்ரியா நடிக்கிறார் என சில தகவல்கள் உலவின.
Published on
Summary

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் ஆண்ட்ரியா மீண்டும் ‘வட சென்னை’யின் சந்திரா கதாபாத்திரமாக நடிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார். சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார் என்ற வதந்தி முற்றிலும் தவறானது என அவர் தெளிவுபடுத்தினார். படப்பிடிப்பு பரபரப்பாக, திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அரசன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் வட சென்னை படத்தின் உலகத்தில் தான் உருவாகிறது என முன்பே அறிவித்துவிட்டனர். சமீப காலமாக இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக ஆண்ட்ரியா நடிக்கிறார் என சில தகவல்கள் உலவின.

Simbu's Arasan shooting resumes after a temporary stall
Simbu, VetrimaaranArasan

இந்த தகவல் தவறானது என சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஆண்ட்ரியா. அதில் ஆண்ட்ரியா கூறுகையில் "இப்போ அரசன் படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. இதுவரை நன்றாக போகிறது. வட சென்னை படத்தில் நான் நடித்த அதே சந்திரா பாத்திரமாக தான் இதிலும் நடிக்கிறேன். சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. எல்லாம் தப்புத்தப்பா நியூஸ் போடுகிறார்கள்.

Andrea Jeremiah
9 வருடங்கள் கழித்து படம்... கார்த்தியுடன் கை கோர்த்த ‘தனி ஒருவன்’ மோகன் ராஜா!

எனவே அதனை இங்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நான் சிம்புவுடைய அம்மாவாக நடிக்கவில்லை. நான் சந்திரா தான். மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், நான் சிம்பு அம்மா கிடையாது. இந்த செய்தியை பதிவிடுங்கள்" என்று பேசினார்.

Andrea Jeremiah
"தியாவையும், தேவ்வையும் என் ஊருக்கு அழைத்து வந்து.." - சூர்யா சொன்ன க்யூட் சம்பவம் | Suriya
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com