ரஜினி 170-ல் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில்? படப்பிடிப்பு எப்போ?

நடிகர் ரஜினிகாந்தின் 170 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3-வது வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி 170
ரஜினி 170Twitter

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம், ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் பெருவெற்றி அடைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் 170-வது
திரைப்படம்
ரஜினியின் 170-வது திரைப்படம்Twitter

ரஜினி 170 படப்பிடிப்பு செப்டம்பர் 3-வது வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜினி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் ஃபஹத் பாசில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கவுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com