Allu Arjun and Atlee film title teaser update
Allu Arjun, AtleeAA22xA6

அல்லு அர்ஜூன் - அட்லீ படத்தின் அப்டேட்.. தேதி குறித்த படக்குழு? | AA22xA6 | Allu Arjun | Atlee

அல்லு அர்ஜூன் உடன் தீபிகா படுகோன் நடித்து வரும் AA22xA6 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. VFX தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது இப்படம்.
Published on

இந்திய திரையுலகில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். `அலா வைகுண்டபுரம்' படத்துக்கு பிறகு இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் `புஷ்பா' இரு பாகங்களுக்கு பிறகு உலக அளவில் புகழ்பெற்றார். `புஷ்பா 3' படத்துக்கு முன்பு மற்ற இயக்குநர்களுடன் பணிபுரிய திட்டமிட்டவர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியானது.

அல்லு அர்ஜூன் உடன் தீபிகா படுகோன் நடித்து வரும் AA22xA6 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. VFX தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது இப்படம். இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகப்போகிறது என்பதால், ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கொடுக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழு. அதன்படி, இந்த ஆண்டு அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வெளியாக உள்ளது என சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு இப்படம் வெளியாகும் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அல்லு அர்ஜூன்.

Allu Arjun and Atlee film title teaser update
"பிடித்த கதைக்காக ஒரு வருடம் கூட காத்திருப்பேன்!" - பாவனா | Bhavana | Anomie

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com