
செல்வமணி இயக்கத்தில் பசுபதி, விதார்த் நடித்துள்ள சீரிஸ் `குற்றம் புரிந்தவன்'. குழந்தை காணாமல் போன விஷயத்தில் உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஒருவரின் கதை.
ஜஸ்வின் இயக்கியுள்ள சீரிஸ் `Dhoolpet Police Station'. தூள்பேட் ஏரியாவில் வரும் ஆபத்தும் அதை எதிர்கொள்ளும் காவலர்களுமே கதைக்களம்.
Tallulah H. Schwab இயக்கியுள்ள படம் `Mr. K'. விடுதி ஒன்றில் எழுத்தாளர் சந்திக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளே கதை.
Michael Rohl இயக்கியுள்ள படம் `My Secret Santa'. வேலையை இழந்த பெண் ஒருவர், வயதான ஆண் போல் வேடமிட்டு, ஒரு ரிசார்ட்டில் சாண்டா க்ளாஸ் வேடமிடும் பணியில் சேர்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் ஒரு சிக்கலே கதை.
மிதுன் பாலாஜி இயக்கியுள்ள படம் `ஸ்டீபன்'. கொலைகாரன் ஒருவரை விசாரிக்கும் மனநல மருத்துவரின் கதை.
Noah Baumbach இயக்கத்தில் George Clooney நடித்துள்ள படம் `Jay Kelly'. பிரபல நடிகர் தனது கடந்த கால நிகழ்வுகளை பற்றி தனது மேலாளருடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களே கதை.
Pierre Perifel இயக்கிய அனிமேஷன் படம் `The Bad Guys 2'. ஒரு குழு இணைந்து செய்யும் கொள்ளை திட்டமே கதை.
ராகுல் ரவீந்திரா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த படம் `The Girlfriend'. ஒரு பெண் காதல் உறவால் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய படம்.
ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் திருவீர் நடித்த படம் `The Great Pre-Wedding Show'. Pre-Wedding போட்டோ ஷூட் ஒன்றில் நடக்கும் கலாட்டாக்களை ஒரு தம்பதி எப்படி சமாளிக்கிறது என்பதே கதை.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்த படம் `Dies Irae. ரோகனின் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்களுக்கு பிறகான காரணம் என்ன என்பதே கதை.
ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் `Lockdown'. லாக்டவுன் காலத்தில் அனிதா எதிர்கொள்ளும் சவால்களே கதை.
விபின் இயக்கத்தில் கீதா கைலாசம் நடித்துள்ள படம் `அங்கம்மாள்'. குடும்பம் மொத்தமும் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு தரும் ஒரு அழுத்தமும், அதை சுற்றிய நிகழ்வுகளுமே கதை.
போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் `Akhanda 2: Thaandavam'. முரளி கிருஷ்ணாவின் மகளுக்கு வரும் ஆபத்தும் அதை எப்படி அகண்டா சரி செய்கிறார் என்பதே கதை.
ஜிதின் ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள படம் `Kalamkaval'. வழக்கமான ஒரு போலீஸ் விசாரணையின் மூலம் வழக்கத்துக்கு மாறான ஒரு விஷயம் தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணைகளே கதை.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள படம் `Dhurandhar'. கராச்சிக்குள் நுழையும் ஒரு நபர், செய்யும் சாகசங்களே கதை.