AK64
AK64Ajith, Adhik

AK 64 UPDATE! "அஜித் தரப்பில் இருந்தே" - ஆதிக் சொன்ன தகவல் | Adhik Ravichandran | Ajith

"ரவிச்சந்திரன் எனக்கு அப்பா என்பதை போல, அஜித் சாரும் எனக்கு ஒரு அப்பாதான்" - ஆதிக்
Published on

`த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்பு சிம்பு நடிப்பில் `AAA', பிரபுதேவா நடிப்பில் `பஹீரா' போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் விஷால் - எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான `மார்க் ஆண்டனி' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதன் பின்னர் அஜித் - ஆதிக் கூட்டணியில் `குட் பேட் அக்லி' உருவாகி இப்படமும் மிகப்பெரிய ஹிட்டானது.

Good Bad Ugly
Good Bad UglyAdhik, Ajith

இவர் மீண்டும் அஜித் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார் என்ற தகவல் உலவி வருகிறது. இயக்குநர் ஆதிக் இதனை சில இடங்களில் உறுதியும் செய்திருக்கிறார். தற்போது கார் ரேஸில் தீவிரமாக பங்குபெற்று வருகிறார் அஜித். அவரது Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்து சாதனை செய்துள்ளது. சினிமா பொறுத்தவரை அஜித்தின் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் சுற்றி வருகிறது. 

AK64
ம.பி.| இருமல் மருந்து சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள்.. தொடர்புடைய மருத்துவர் கைது!

இந்த சூழலில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக் AK 64 படம் பற்றிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். "பூஜ்ஜியமாக இருக்கும் போது ஒருவரை நம்புவது ஓகே. ஆனால் நான் மைனஸில் இருந்த போது என்னை நம்பினார் அஜித் சார். ரவிச்சந்திரன் எனக்கு அப்பா என்பதை போல, அஜித் சாரும் எனக்கு ஒரு அப்பா தான்.  ரசிகர்களுக்காக செய்த படம் `குட் பேட் அக்லி'. AK 64 எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும். ரசிகர்கள், ஃபேமிலி ஆடியன்ஸ் அனைவரும் ரசிக்குப்படியான ஆக்ஷன் படமாக உருவாகும். இந்த மாதம் சார் தரப்பில் இருந்து ஒரு அப்டேட் வந்துவிடும்." எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com