\
Ajithkumar
AjithkumarDare Devil

மனைவி ஷாலினி தயாரிப்பில் அஜித்தின் புதிய படம்.. ’Dare Devil’ என பெயர் அறிவிப்பு! | Ajithkumar

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் இப்படத்துக்கு தயாரிப்பாளராக களம் இறங்கி BREAVE HEARTS நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகும் இந்த படத்தை, தயாரிப்பாளராக களமிறங்கும் அவரது மனைவி ஷாலினி, BREAVE HEARTS நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ‘குட் பேட் அக்லி’ படக்குழுவின் பெரும்பாலானோர் மீண்டும் இணைகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தற்போது இவர் சினிமா தாண்டி கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த `குட் பேட் அக்லி' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் ஆதிக் இயக்கத்தில் இன்னொரு படம் நடிக்கிறார் என சொல்லப்பட்டது.

அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்web

`குட் பேட் அக்லி' வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஒரு பக்கம் அஜித் தனது கார் ரேஸ் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அதனை விட முக்கியமான காரணம், இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் அமையாமல் இருந்ததே காரணம் என சொன்னது சினிமா வட்டாரம். அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வராததால் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் இப்படத்துக்கு தயாரிப்பாளராக களம் இறங்கி BREAVE HEARTS நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

Ajithkumar
"தியாவையும், தேவ்வையும் என் ஊருக்கு அழைத்து வந்து.." - சூர்யா சொன்ன க்யூட் சம்பவம் | Suriya

அஜித்தின் 64வது படமான இதற்கு `டேர் டெவில்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். சமீபத்தில் நடந்த எழுத்தாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த ஆதிக் இப்படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டது எனவும், அறிவிப்பு வெளியானதும் படப்பிடிப்பு துவங்கி விடும் எனவும் கூறி இருந்தார். அதன்படி விரைவில் அஜித்தின் அடுத்த படம் துவங்க உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் இருந்த ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி, சண்டைப்பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பாளர் அனு வர்த்தன் என பெரும்பாலும் அதே குழு இதிலும் இணைந்துள்ளது. வேதாளம், விவேகம், விடாமுயற்சி படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் படத்தில் இணைந்துள்ளார் அனிருத்.

ஏற்கெனவே அஜித் குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று அவர் நடித்த ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றும் வெளியானது. அவர் நடித்த விளம்பரம் தான் வருகிறது, படம் வரவில்லை என அவரின் ரசிகர்கள் பலரும் கவலை கொண்டிருந்த சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Ajithkumar
”நாம விரும்புறத தேடணும்.. நேர்மையா..” வைரலாகும் அஜித் குமாரின் புதிய விளம்பர வீடியோ!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com