Farhana movie poster@DreamWarriorpic twitter
கோலிவுட் செய்திகள்
திருவாரூர் திரையரங்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் ரத்து - என்ன காரணம்?
எதிர்பார்த்த கூட்டம் வராததாலும், பலத்த எதிர்ப்பின் காரணமாகவும் திருவாரூரில் உள்ள ஒரு திரையரங்கில் ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் காட்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் நேற்று திருவாரூரில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட இருந்தது. இந்த நிலையில் அங்கு அந்த திரைப்படம் திரையிடப்பட பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த திரையரங்கிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
FarhanaMathavan @PT
பரபரப்பாக அங்கு சூழல் நிலவி வந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் திரையிடப்படாமல் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு நிர்வாகம் நோட்டீஸ் அடித்து ஒட்டியது.
இதன் பின்னணி என்ன என்பது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், “ஏற்கெனவே இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை திரையிடக்கூடாது என பெரிய அளவிலான எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. இருந்தாலும், இந்த படத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் வராததால்தான் திரைப்படக் காட்சி ரத்து செய்யப்பட்டது” என திரையரங்க நிர்வாகம் தெரிவித்தது.