Adoor Gopalakrishnan
Adoor Gopalakrishnan30th IFFK

"`Beef' படம், மாட்டிறைச்சி பற்றியதல்ல" - IFFK சர்ச்சை பற்றி அடூர் கருத்து | Adoor Gopalakrishnan

Battleship Potemkin படம் சினிமாவின் சரித்திரத்திலேயே மிக முக்கியமான படம். சினிமா பயில்வதற்கான பாடப்புத்தகமாகக் கருதலாம். இதனை திரையிட கூடாது என சொல்வது அறியாமையன்றி வேறெதுவும் இல்லை.
Published on

30வது கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK) டிசம்பர் 12 முதல் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 19ம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த விழாவில் கிட்டத்தட்ட 19 திரைப்படங்கள் திரையிடுவதற்கு அனுமதி மறுத்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

புகழ்பெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழா மிகவும் தனித்துவமானது, பல்வேறுமாநிலங்கள், நாடுகளில் இருந்து கூட இந்த விழாவுக்கு வந்து திரைப்படங்களை பார்த்து செல்வார்கள் சினிமா ஆர்வலர்கள். இந்த நிகழ்வில் பாலஸ்தீனத்தைப் பற்றி எடுக்கப்பட்ட சில திரைப்படங்கள் திரையிட பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால் அவை உட்பட 19 திரைப் படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். கடந்த இரு தினங்களில் மட்டும் கிட்டத்தட்ட 7 படங்கள் திரையாகவில்லை.

Beef, Santosh
Beef, SantoshIFFK

Wajib, Palestine 36, Once Upon A Time in Gaza, Beef, Heart of The Wolf, Eagles of The Republic, Timbuktu, Bamako, and All That’s Left Of You, Santosh ஆகியவை உட்பட பல படங்கள் இதனால் திரையாகவில்லை. இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக திரைப்பட விழாக்களில் படங்களைத் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்றாலும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இப்போது இத்தனை படங்களுக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்திருப்பதால் விழாவின் அட்டவணை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

Adoor Gopalakrishnan
`பராசக்தி' கண்காட்சி... புது உத்தியை கையில் எடுத்த SK படக்குழு! | Parasakthi Exhibition

இதுகுறித்து இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் "இதில் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். இவற்றை திரையிட அனுமதி மறுப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. Battleship Potemkin படம் சினிமாவின் சரித்திரத்திலேயே மிக முக்கியமான படம். சினிமா பயில்வதற்கான பாடப்புத்தகமாகக் கருதலாம். இதனை திரையிடக்கூடாது என சொல்வது அறியாமையன்றி வேறெதுவும் இல்லை. இந்தப் படங்கள் அனைத்தும் நேர்த்தியாக தேர்வு செய்யப்பட்ட படங்கள். பல சர்வதேச திரைவிழாக்களில் விருதுகள் வென்ற படங்கள். இதெல்லாம் அறிவுள்ளவர்களுக்கு தான் தெரியும். சினிமா தெரிய வேண்டும், உலகில் என்னநடக்கிறது என தெரிய வேண்டும். வெறுமனே சினிமாவின் தலைப்பை வைத்து முடிவு செய்யும் அளவுக்கே ஆட்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு `Beef' என்ற தலைப்பில் ஒரு படம் உண்டு. அதன் அர்த்தம் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவதல்ல. அது ஒரு சொல் அவ்வளவே. அதிகாரிகள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com