கைதி 2
கைதி 2 முகநூல்

கைதி 2-வில் நடிகர் விஜய் இருப்பாரா? வெளியான முக்கிய தகவல்...!

ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வரும் கைதி 2 திரைப்படத்தில், நடிகர் விஜய்யின் குரல் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குநராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தன் படங்களில் கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களின் மூலம் தனக்கென LCU யூனிவெர்ஸ் (Lokesh Kanagaraj Universe) என்ற டிரெண்ட் செட்டிங்கை அமைத்து வருகிறார். அதாவது, இவரது ஒரு படத்தில் நடக்கும் சம்பவங்கள், மற்றொரு படத்திலும் எங்காவது வந்து லீட் கொடுக்கும்...!

லோகேஷின் படங்கள் யாவும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிகளை குவித்துள்ளதால் அடுத்தடுத்து இவர்மீது எதிர்பார்ப்பு உயரவே செய்துள்ளது.

கைதி 2-
கைதி 2-புதிய தலைமுறை

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்ற கைதி படம்தான் எல்.சி.யூவுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இப்படத்தின் 2 ஆம் பாகம், விரைவில் தயாராகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான சூழலில், அதில் கமல் மற்றும் சூர்யாவும் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

கைதி 2
‘ஜனவரி மாதமே முயற்சி செய்தேன்..’ - மறைந்த பாடலாசிரியர் ரவி ஷங்கரின் உருக்கமான கடைசி கடிதம்!

இத்தோடுகூட திரைத்துறையிலிருந்து வெளியேறி அரசியலில் கவனம் செலுத்தவுள்ள விஜய், இப்படத்தில் நடிக்கமாட்டார் எனவும், லியோ படத்தில் கமல்ஹாசனின் குரல் இடம்பெற்றது போல் கைதி 2-வில் விஜய்யின் குரல் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் ரசிகர்களுக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com