The Greatest Of All Time - The GOATX Page
கோலிவுட் செய்திகள்
‘அண்ணன் வர்றார் வழிவிடு’ | The GOAT கொண்டாட்டம்... விசில் போடும் ரசிகர்கள்...!
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் தமிழகத்தில் இன்று காலை வெளியாகிறது!
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் தமிழகத்தில் இன்று காலை வெளியாக உள்ள நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம், தமிழகத்தில் இன்று காலை 9மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. கோட் படத்துக்கு 2 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், தமிழக அரசு ஒருநாள் மட்டும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.