விஜய்-ரசிகர் அபினாஷ்
விஜய்-ரசிகர் அபினாஷ்PT Desk

ஓவியத்தை பரிசளிக்க காலை முதல் இரவு வரை காத்திருந்த விஜய் ரசிகர்; கடைசிவரை சந்திக்காததன் காரணம்என்ன?

தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு பரிசளிக்க வேண்டும் என்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்து ஏமாற்றுத்துடன் திரும்பினார்.
Published on

சென்னை நீலாங்கரையில் விழா நடைபெற்ற தனியார் அரங்கிற்குள் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அவர்களை அழைத்து வந்த முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செல்ஃபோன், பேனா உள்ளிட்ட எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. பாராட்டுச் சான்றிதழ் பெற்று கொண்ட மாணவர் ஒருவரின் பெற்றோர், விஜய்க்கு திருநீறு வைத்தார். விஜய்க்கு ஏலக்காய் மாலை அணிவித்தனர். சில ரசிகர்கள் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி விழா நடைபெற்ற மண்டபத்திற்கு வந்தனர்.

அதில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் அபினாஷ் என்பவர், தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு பரிசளிக்க வேண்டும் என்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்து ஏமாற்றுத்துடன் திரும்பினார். முழுக்க முழுக்க மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் நேரம் ஒதுக்கவில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோருடன் வாகனங்கள் மூலம் அழைத்து வந்தது போலவே மீண்டும் பாதுகாப்பாக ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com