சரத்பாபுtwitter page
கோலிவுட் செய்திகள்
நடிகர் சரத்பாபு குறித்து தவறான வதந்தி பரப்ப வேண்டாம்! குடும்பத்தினர் வேண்டுகோள்!
நடிகர் சரத்பாபு குறித்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. அதில் உண்மை இல்லை என்றும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sarath Babu
இதுகுறித்து அவரது சகோதரி ”சரத்பாபு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் படிப்படியாக முன்னேறி வருகிறது. அவர் வேறு ஓர் அறைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். மேலும் விரைவில் சரத்பாபு முழுமையாகக் குணமாகி ஊடகங்கள் முன் பேசுவார். ஆகையால், தயவு செய்து அவரைப் பற்றிய பொய்யான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.