“கலைஞர் பற்றி பயோபிக் எடுத்தால், நான் கலைஞர் ஐயா கதாபாத்திரத்தில் நடிக்க தயார்...” - நடிகர் ஜீவா

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்த பயோபிக் எடுத்தால், அவரது கதாபாத்திரத்தை நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
ஜீவா
ஜீவாபுதிய தலைமுறை

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்படும் புகைப்பட கண்காட்சியை நடிகர் ஜீவா மற்றும் பாடலாசியர் பா.விஜய் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கருணாநிதி பயோபிக் குறித்த கேள்விக்கு பதிலளித்தனர்.

அதில், “கலைஞர் ஐயாவை பற்றி நிறைய விஷயங்கள் சினிமா தொடர்பாக அறிந்து வியந்திருக்கிறேன். இங்கே வந்து பார்க்கும்போது, சினிமா மட்டுமல்ல நிச்சயமாக முதலமைச்சராகவும் அவர் மக்களுக்காக பணி செய்து இருக்கிறார். அவையாவும் இங்கே ரொம்ப அழகாக, மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

ஜீவா
அச்சு அசலாக நடித்த ஜீவா; யாத்ரா 2 பேசும் அரசியல் என்ன? 2024 தேர்தலில் ஜெகனுக்கு கை கொடுக்குமா?

வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பது போல உணர்வு இங்கே இருந்தது. அதிலும் இங்கே அமைக்கப்பட்டுள்ள அரங்கில், கலைஞர் ஐயா பேசியது மிக அழகாக இருந்தது. அதை இவர்கள் வெளிப்படுத்திய விதமும் அழகாக இருந்தது. கலைஞர் பற்றி கூறும் படம் இன்னும் அழகாக இருந்தது. என்னுடைய இயக்குனர் பா.விஜய் அவர்கள் ரொம்ப அழகாக காட்சிப்படுத்திருந்தார்.

மக்களுக்காக நிறைய விஷயங்கள் செய்த கலைஞரின் நூற்றாண்டு விழாவில், அவரைப்பற்றி மிகப்பெரியதாக பார்த்திருந்தோம். இந்த இடத்தில் அதுவே குறும்படமாக உள்ளது

கலைஞரின் பயோபிக் எடுத்தால், நிச்சயம் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். சமீபத்தில் கூட தெலுங்கில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை நடித்திருந்தேன். ஆனால், இப்போது பயோபிக் எடுத்தால், படத்தை காட்டிலும் அதை சீரிஸாக எடுக்க வேண்டும், நிச்சயம் அதில் நான் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com