திருவண்ணாமலை: மனைவியுடன் 14 கி.மீ கிரிவலம் சென்ற நடிகர் அருண் விஜய்! வைரலாகும் வீடியோ!

திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் தன் மனைவியுடன் கிரிவலம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்Twitter

அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டியுள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையை சுற்றி கிரிவலம் வந்தார்.

அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவிலில் குறுகலான அந்தப் பாதையில் மண்டியிட்டு அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார். அவர் கிரிவலம் சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com